நாகர்கோவில் நவ 17
கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறை, பூத்துறை மீனவ கிராமங்கள். தேங்காய்பட்டணம் துறைமுகம் மற்றும் குன்னத்தூர் கிராமம் ஆகிய பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
கிள்ளியூர் வட்டம், ஏழுதேசம் கிராமம், இரையுமன்துறை மீனவ கிராமத்தை கடல் அலை சீற்றத்திலிருந்து பாதுகாக்க கடல் அலை தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்கு பாறாங்கல் கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் பூத்துறை அரையன்தோப்பு பகுதியில் இருந்து கடற்கரை பகுதிக்கு திரும்பி கடற்கரையை ஒட்டி போடப்பட்டுள்ள சாலை வழியாக செல்கின்றது. இந்த சாலை கரடு முரடுடாக இருப்பதால் பாறாங்கல் இறக்கிவிட்டு, லாரிகள் வரும் போது அதிபயங்கரமான சத்தம் கேட்கிறது, மேலும் வீடுகள் குலுங்குகின்றன. இதனால் சாலையை ஒட்டி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு உயிர்பயத்தை ஏற்படுத்துகிறது எனவே சாலையை சரிவர சீரமைத்த பிறகு பாறாங்கல் கொண்டு சென்றால் போது என பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் கடல் அலை தடுப்பு சுவர் அமைக்கும் பணி தடைப்பட்டது.
இக்கோரிக்கையானது எனது பார்வைக்கு வந்தபோது, துறை சார்ந்த அலுவலர்களை அனுப்பி. தீர்வு கானும்படி அறிவுறுத்தபட்டது. இருப்பினும் இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படமால், இரு கிராமங்களுக்கு இடையேயான எல்லை கல்லினை அகற்றியதால் மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது குறித்து தகவல் எனது கவனத்திற்கு கொண்டு வந்ததைத்தொடர்ந்து நேற்று நான் பூத்துறை மற்றும் இரையுமன்துறை பகுதி மக்களிடையான பிரச்சினைக்குரிய இடம் மற்றும் சேதமடைந்த சாலை ஆகிய பகுதிகளை நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டதோடு, மீண்டும் அதே இடத்தில் எல்லை கல்லினை நிறுவிட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் பூத்துறையிலிருந்து இரையுமன்துறைக்கு செல்லும் சாலையினை சரி செய்து இரையுமன்துறை பகுதியிலுள்ள கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தினை ஆய்வு செய்ததோடு, அப்பகுதியில் பாலம் கட்டுமான பணி நீதிமன்ற வழக்கில் உள்ளதால் புகார் கொடுக்கப்பட்ட நபரை அழைத்து பேசவும், புதிய ஜெட்டிக்கு செல்லும் பாதை பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், இரையுமன்துறை துறைமுகத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுக ஏலக்கூடாராத்தினை ஆய்வு மேற்கொண்ட போது, ஏலக்கூடாரத்தின் உடைந்த தரைப்பகுதியினை சரிசெய்து. கழிவுநீர் ஓடையில் கிரில் போட வேண்டும் என்றும், மீன்பிடித்துறைமுகத்தின் கழிவறையினை சுத்தமாக வைத்து கொள்ளவும். கழிவறையினை சுத்தமாக வைத்துக்கொள்ள தரம் வாய்ந்த பொருட்களை பயன்படுத்தவும். ஆண்கள் மற்றம் பெண்கள் கழிவறையினை பிரித்து சுவர்
அமைத்திடவும். தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்திலுள்ள உணவகம் போதுமான இடவசதி இல்லாததால் மீனவர் ஓய்வறையினை உணவகமாக மாற்றி மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் உணவத்தினை நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக குன்னத்தூர் கிராம வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் புதிதாக சாலை அமையும் இடத்தினை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இச்சாலை அமைப்பது குறித்து அப்பகுதிமக்களிடம் குறைகள் கேட்டறியப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம். பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் வினய்குமார் மீனா, மீன்வளத்துறை துணை இயக்குநர் சின்னகுப்பன், மார்த்தாண்டம் துணை காவல் கண்காணிப்பாளர். தேங்காய்பட்டணம் துறைமுக செயற்பொறியாளர் செல்வராஜ், வட்டாட்சியர்கள் ஜூலியன் ஹிவர் (விளவங்கோடு). ராஜசேகர் (கிள்ளியூர்). பொதுமக்கள்
துறைசார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.