தென்காசி மாவட்டம் சீவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்புத் தேர்தல் பள்ளித் தலைமையாசிரியர் திவான் பக்கீர் தலைமையில் நடைபெற்றது. தேர்தல் பார்வையாளராக செங்கோட்டை வட்டார மையப் மேற்பார்வையாளர் லதா கலந்து கொண்டார் பெற்றோர்கள் முன்னிலையில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் செங்கோட்டை முன்னாள் யூனியன் சேர்மனும் பள்ளி மேலாண்மைக் குழு கல்வியாளருமான சட்டநாதன் உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பள்ளி வளர்ச்சி குறித்து பேசினார் உதவித் தலைமையாசிரியர் லதா நன்றி கூறினார் பள்ளியின் ஆசிரியர்கள் கிருஸ்டோபர், கோமதிநாயகம், சண்முகநாதன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர் மேலும் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



