நாகர்கோவில் டிச 12,
வேலைவாய்ப்பு மோசடி குறித்த Reels இல் நடித்த youtuber ஐ நேரில் அழைத்து பாராட்டிய எஸ் பி கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பாக, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முயற்சியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் வேலைவாய்ப்பு மோசடி குறித்து ரீல்ஸ் எடுத்து வெளியிடப்பட்டிருந்தது.
இந்த ரிலீஸ் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை என்ற பக்கத்தில் இந்த ரீல்ஸ் வெளியிடப்பட்டிருந்தது. இந்த ரீல்ஸ் ஆனது பொதுமக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது.
எனவே நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த ரீல்ஸ் -ல் சிறப்பாக நடித்திருந்த பிரபல youtuber சர்ஜின் மற்றும் அவரது தாயார் ஜான்சி யை நேரில் வரவழைத்து பாராட்டி பரிசு வழங்கினார்.