கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலையத்தில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு காவல் நிலையத்தை தூய்மைப்படுத்தி காவலர்களின் வாகனங்களுக்கும்,கைதி அறை மற்றும் துப்பாக்கி ஆகியவற்றிக்கு மாலை அணிவித்து போலீசார் பூஜை செய்தனர்.காவல் நிலையம் முன்பு வாழை தோரணங்கள் கட்டி அலங்கரித்து இருந்தனர். மேலும் காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட சரஸ்வதி புகைப்படத்திற்கு மாலை அணிவித்து பூசாரியை அழைத்து வந்து பூஜை கொடுத்து சரஸ்வதி பூஜையை விமர்சையாக கொண்டாடினர். இதில் ஏஎஸ்பி லலித்குமார் தலைமையில் கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர்.அருள்பிரகாஷ் முன்னிலையில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.



