ஈரோடு பிப் 28
ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உள்ள 13000 மெ.டன் கொள்ளளவு கொண்ட மஞ்சள் அரவை ஆலை உள்ளது. இந்த மஞ்சள் அரவை ஆலை மூலம் தயார் செய்யப்படும் மஞ்சள் தூள் மங்களம் என்ற வர்த்தக பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பாரம்பரிய சுவை மற்றும் ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்படும் மல்லித்தூள், மிளகாய்த்தூள், சாம்பார்பொடி, ரசப்பொடி, இட்லிபொடி, மட்டன் மசாலா, சிக்கன் மசாலா, கரம் மசாலா, குழம்பு மிளகாய் பொடி, நாட்டுச்சர்க்கரை, ராகி மாவு, கடலை மாவு, பஜ்ஜி மாவு உள்ளிட்ட பொருட்கள் தரமாகவும், மலிவான விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2023-2024-ம் ஆண்டில் ரூ.1121.61 இலட்சம் மதிப்பிலான மங்களம் பொருட்கள் 868.556 டன் அளவிற்கும், 2024-2025-ம் ஆண்டில் இது வரை ரூ.972.21 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் 710.49 டன் அளவிற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மங்களம் உற்பத்தி பொருட்களை வாங்கி பயன்பெற்று வரும் பயனாளி ஈரோடு ஜெகநாத புரம் பகுதியை சேர்ந்த பூங்கொடி என்ற பெண் தெரிவித்ததாவது,
நான் ஈரோடு ஜெகநாதபுரம் காலனியில் வசித்து வருகிறேன். எனக்கு 2 மகன்கள் உள்ளனர். எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். எங்கள் பகுதியில் உள்ள கூட்டுறவு பண்டக சாலை நியாய விலை கடையில் ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தயாரிப்பு பொருளான மங்களம் உற்பத்தி பொருட்களை எனது அன்றாட வீட்டு உபயோகத்திற்கு வாங்கி பயன்படுத்தி வருகிறேன். இது மற்ற அங்காடிகளில் விற்கப்படும் பொருட்களை விட குறைந்த விலையிலும், தரமாகவும் உள்ளது. மங்களம் உற்பத்தி பொருட்கள் பராம்பரிய முறையில் தயாரித்து விற்பனை செய்வதால் மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நிறைந்த மனதுடன் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.என்று கூறினார்.