சேலம் மாவட்டம் அரியானூர் பகுதியில் அமைந்துள்ள ஆதித்யா திருமண மண்டபத்தில் சேலம் திமுக கிழக்கு மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் சார்பில் பாக நிலை முகவர்கள்(BLA2) பாக நிலை குழு உறுப்பினர்கள்(BLC )ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர் வரவேற்புரையாற்றினார்.
இதில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்
ஆர்.சிவலிங்கம் தலைமை தாங்கினார். சேலம் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாரப்பட்டி க.சுரேஷ் குமார், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் டாக்டர் தருண், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் கிருபாகரன்,பொதுக்குழு உறுப்பினர் மலர்விழி ராஜா, விளையாட்டு மேம்பட்ட அணி அமைப்பாளர் பிரண்ட்ஸ் ரமேஷ் மற்றும் முக்கிய நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள், பாக நிர்வாகிகள், மற்றும் கட்சி கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



