நாகர்கோவில் மே 25
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் விபத்து இல்லா குமரி என்ற குறிக்கோளுடன் பல்வேறு விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மத்தியில், விழிப்புணர்வை ஏற்படுத்தி சாலை பாதுகாப்பை மேம்படுத்த ரீல்ஸ் போட்டி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இது இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று, அவர்களுடைய படைப்பாற்றலை வெளிக்கொண்டு வருவதாக அமைந்தது. சுமார் 40 ரீல்ஸ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. அனைத்து படைப்புகளும் மிகச் சிறந்தவைகளாக அமைந்திருந்தன. அதில் சிறந்த மூன்று படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. விபத்துல்லா குமரி மாவட்டம் என்ற நோக்கில் சிறந்த ரீல்சை உருவாக்கிய
மார்த்தாண்டம் எழில் மற்றும் குழுவினருக்கு முதல் பரிசும்,
நாகர்கோவில் அஸ்மி பாத்திமா மற்றும் குழுவினருக்கு இரண்டாம் பரிசும்,
களியங்காடு ஜனா மற்றும் குழுவினருக்கு மூன்றாம் பரிசு அறிவிக்கப்பட்டது.
வெற்றி பெற்ற மூன்று குழுவினருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று 24-05-25 மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து சான்றிதழ் மற்றும் முதல் பரிசு பெற்றவருக்கு பத்தாயிரம், இரண்டாம் பரிசு பெற்றவருக்கு 7000, மூன்றாம் பரிசு பெற்றவருக்கு 5000 என வழங்கினார்.
இந்நிகழ்வில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இந்த ரீல்ஸ் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு தெரிவித்ததோடு, அனைத்து படைப்புகளும் மிகச் சிறந்தவைகளாக இருந்தன அவற்றிலிருந்து முதல் மூன்று இடங்களை தேர்ந்தெடுப்பதற்கு மிகச்சிரமமாக இருந்தது என்றும், அனைவரும் மிகச் சிறந்த படைப்பாற்றலை வெளிப்படுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
எஸ் பி ஸ்டாலினின் பேச்சு ரீல்ஸ் எடுத்தவர்களின் மத்தியில் புது உற்சாகத்தை ஏற்படுத்தி இருப்பதாக போட்டியில் பங்கு பெற்றவர்கள் தெரிவித்தனர்.