தஞ்சாவூர்.மார்ச்.11.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக மகளிர் தினத்தையொட்டி மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கி நேரடி கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில் 34073 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 408876 உறுப்பினர்களுக்கு ரூ.3190.10 கோடி வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் நேரடி ஒளிபரப் பு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.முதல்வர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததையொட்டி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைகழகம் கரிகாற் சோழன் கலையரங்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவி வழங்கும் விழா தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைப்பெற்றது.
உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிக் கடனுதவி காசோலைகளை வழங்கினார்.
தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.
நீலமேகம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், கும்ப கோணம் மாநகராட்சி மேயர் சுப.தமிழழகன்,துணை மேயர் அஞ்சுகம் பூபதி,மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் ச.சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரக பகுதியில் 15568 மகளிர் சுய உதவிக் குழுக்களும் நகரப்பகுதியில் 4412 மகளிர் சுய உதவிக்குழுக்களும் ஆக கூடுதல் 19980 மகளிர் சுய உதவிக்களில் 239760 சுய உதவி குழு உறுப்பினர்கள் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டு ஊரக மற்றும் நகரப்பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி நேரடி கடன் 17762 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1383.00 கோடி இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டதில் தற்போது வரை 16934 சுய உதவிக்குழுக்ளுக்கு ரூ.1392.47 கோடி இலக்கீடு அடைய பெற்றுள்ளது.இதில் 1978 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 23386 உறுப்பினர்களுக்கு ரூ.176.75 கோடி மதிப்பிலான வங்கி நேரடி கடன் குழுக்களுக்கும் மற்றும் ஊராட்சி/பகுதி அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கும் பெருங்கடனும் நலத் திட்ட உதவிகளும்,69 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி ரூ.103.5 இலட்சம் நிதியும், 219 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி ரூ.32.85 இலட்சம் நிதியும். ஆக கூடுதல் 2266 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.178.11 கோடி நிதி வழங்கப்பட்டது.



