சங்கரன்கோவில். நவ.11.
சங்கரன்கோவில் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டார். அப்பொழுது அந்த பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் மேற்கூரை அமைத்து தர வேண்டுமென கோரிக்கையை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தெரிவித்தார். தொடர்ந்து தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 11 லட்சம் ஒதுக்கி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மேற்கூரை அமைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மேற்கூரை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது .நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை கீதாவேணி தலைமை வகித்தார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், நகர செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு மேற்கூரை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து மாணவிகளிடம் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி ,நகர துணைச் செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புத்தாய் ,மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அப்பாஸ் ,வார்டு செயலாளர் இளங்கோ மாரியப்பன், ஆசிரியர் சங்கர் ராம், விக்னேஷ் , கார்த்தி, சிவாஜி, பாலாஜி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்