ராமநாதபுரம், பிப்.21-
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் முன்னறிவிப்பு ஏதும் இன்றி சாலையோர வியாபாரிகளின் பொருட்களை குப்பையில் வீசிய நகராட்சி நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களின் அராஜகத்தை கண்டித்து மக்களுடன் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக இராமநாதபுரம் மாவட்ட தலைவர் ரியாஸ் கான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;
ராமநாதபுரம் நகரில் அரண்மனை, பாரதி நகர் போன்ற பகுதிகளிலும் சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதுபோன்ற இடங்களை எல்லாம் தவிர்த்து விட்டு நேரடியாக சிறுபான்மையினர் அதிகம் வசிக்கக்கூடிய சின்ன கடையில் சாலையோர வியாபாரிகளின் பொருட்களான மீன்கள் காய்கறிகள் போன்ற அனைத்தையும் குப்பைத்தொட்டியில் வீசி எறிந்த நகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல் துறையினரின் செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது.
தொடர்ந்து சிறுபான்மையினருக்கு விரோதமாக இது போன்ற செயல்கள் அடிக்கடி ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது முதல்வர் கவனத்திற்கு செல்கிறதா? இல்லையா? அதிகாரிகளை ஒரு மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது வேதனையான விஷயம். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் அரசு எந்திரங்கள் ஈடுபட்டால் மக்களை ஒன்று கூட்டி மிகப்பெரும் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
போராட்டத்தின்
போது ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சகுபர் சாதிக் முன்னாள் மாவட்ட செயலாளர் நதிமுதீன் ராமநாதபுரம் நகர தலைவர் ஹக்கீம் செயலாளர் வதூத், ஆதில் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் செயல்வீரர்கள் உடன் இருந்தனர்.