தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கண்காணித்தல், ஒழித்தல் (Illicit Arrack) மற்றும் போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் ஒழித்தல்
(NCORD) தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 30.09.2024 அன்று நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், உதவி ஆணையர் (ஆயம்) நர்மதா, மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) மகேஸ்வரி, உட்பட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.