ஆம்பூர்:ஆக:11, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு 2024 -26 ஆண்டிற்கான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர் சுரேஷ் , தேவலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி குபேந்திரன், துணைத் தலைவர் உஷாராணி குரு வாசன் மற்றும் 8வார்டு உறுப்பினர். தாமோதரன் சரிதா பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டார்.
பள்ளியின் தலைமையாசிரியர் ஆர்.உமாதேவி அனைவரையும் வரவேற்று பேசினார் .உதவி ஆசிரியர்கள் ஆர். தரணி. எஸ்.லதா ஹேமமாலினி மற்றும் வாசுகி ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவராக.ஜீவிதா, துணைத்தலைவராக. எஸ்.லதா தேர்வு செய்யப்பட்டார்.
இக்கூட்டத்தில்
கிராம நிர்வாக அலுவலர்.வி.விக்ரம் கிராம உதவியாளர் சி.ஹரிநாத்
மற்றும்
தேவலாபுரம் ஊராட்சி செயலாளர்.ஆர். கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜி.பாபு.
மற்றும் முன்னாள் மாணவர்கள்.ஜி.பாபு கார்த்திகேயன் சீனிவாசன்
பார்த்திபன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இறுதியாக பள்ளி மேலாண்மை மறுக்கட்டமைப்பு கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவருக்கும் பள்ளியின் உதவி ஆசிரியர்.ஆர்.தரணி அவர்கள் நன்றி தெரிவித்தார். இக்கூட்டத்தில் பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு முன்னாள் பொறுப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.