சிவகங்கை ஏப்:11
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடுத்துள்ளது காஞ்சிரங்கால் ஊராட்சி இந்தக் காஞ்சிரங்கால் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அரசனேரிகீழமேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளனர் . அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது : 45 -க்கும் மேற்பட்ட ஆதி திராவிட குடும்பங்கள் வாழும் எங்கள் ஊரில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது . தொட்டியில் தண்ணீர் ஒழுகுகிறது . முறைகேடாக ஒரு எச்.பி. சக்தி உள்ள மின் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது .கிராம மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்காமல் பணம் எடுக்கப்பட்டுள்ளது .இதுகுறித்து உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கடந்த 29. O3. 2025ல் நடந்த கிராம சபை கூட்டத்தில் இந்த குறைபாடுகளை முன் வைத்து தீர்மான நோட்டில் எழுத வைத்து தீர்வு காணுமாறு கூறினோம் .
ஆனால் அந்த தீர்மானங்களுக்கு இன்று வரை எந்தவித நடவடிக்கையும் இல்லை . காஞ்சிரங்கல் பஞ்சாயத்தில் மொத்தம் 18 பிளம்பர்கள் சம்பளம் பெற்று வேலை செய்கிறார்கள் .
ஆனால் கூட்டத்திற்கு வெறும் மூன்று பிளம்பர்கள் மட்டுமே வந்திருந்தார்கள் . மேலும் அன்று நடந்த கிராம சபை கூட்டத்திற்கு மெஜாரிட்டி இல்லாமல் வெறும் 30 நபர்களே வந்திருந்தார்கள் . இதற்கு காரணம் அதிகாரிகளின் மெத்தனம் தான் . எனவே பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . எங்கள் கிராம பிரச்சனைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் . மேலும் எங்கள் ஊருக்கு வழங்கப்பட்ட திட்டங்கள் எதுவும் செயல்படுத்தாமலே தவறான முறையில் பணம் எடுத்துள்ளனர் எனவே மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது .