தமிழ்நாடு முதலமைச்சருக்கு மருந்தாளுநர்கள் சங்கம் ராமநாதபுரம் கிளை சார்பில் நன்றி அறிவிப்பு தீர்மானம்
மாவட்ட தலைவர் சந்திரகுமார் தலைமையில் கூட்டம் நடந்தது
ராமநாதபுரம், ஆக.22-
ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு அரசு மருந்தாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நன்றி அறிவிப்பு போர்டுகள் வைத்துள்ளனர்.
தமிழகத்தில் மருத்துவத் துறையில் காலியாக உள்ள 946 மருந்தாளுநர்கள் பணியிடத்தை நிரப்ப தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மருந்தாளுநர்கள் சங்கம் சென்னை அறிவுறுத்தலின்படி ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு அரசு மருந்தாளுநர்கள் சங்கம் சார்பில் கூட்டம் மாவட்டத் தலைவர் சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சோலைராஜன், மாவட்ட பொருளாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் உத்தரவு வழங்க உறுதுணையாக இருந்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர், தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோருக்கு நன்றி அறிவிப்பு தீர்மானம் நிறைவேற்றினர். நன்றி அறிவிப்பு குறித்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நன்றி அறிவிப்பு பிளக்ஸ் போர்டு வைக்க முடிவு செய்தனர். அதன்படி தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மருந்தாளுநர் சங்கம் ராமநாதபுரம் கிளை சார்பில் நன்றி அறிவிப்பு பிளக்ஸ் போர்டு பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட தலைவர்
சந்திரகுமார்
சோலை ராஜன் மாவட்ட செயலாளர்
விஜய குமார் மாவட்ட பொருளாளர்