ஸ்ரீவில்லிபுத்தூர்: ஜீலை:19
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலையில்
பேராசிரியர்கள் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்புகளுக்காக
ஆராய்ச்சியாளர்களை அங்கீகரித்து வெகுமதி அளிக்கும் வகையில் ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கும் விழா
பல்கலைக்கழக வேந்தர் முனைவர். கே. ஸ்ரீதரன் தலைமை வகித்து, இணை வேந்தர் டாக்டர் எஸ்.அறிவழகி, துணைத் தலைவர் முனைவர் எஸ்.சசிஆனந்த்,
துணைத்தலைவர் எஸ்.அர்ஜூன் கலசலிங்கம் முன்னிலையில்
நடைபெற்றது.
2022 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஆராய்ச்சி வெளியீடுகள், காப்புரிமை உரிமைகள் மற்றும் திட்டங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த பணியாளர்களுக்கு ஆராய்ச்சி ஊக்கப் பண விருதுகளை வேந்தர் வழங்கினார். மொத்தம்
ரூ. 16.5 லட்சம், 114 பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன், பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஆராய்ச்சித் துறை இயக்குனர் எம்.பள்ளிகொண்டா ராஜசேகரன் வரவேற்றார் .
பேராசிரியர் கே.மாயாண்டி, ஆசிரியர்களின் பெயர்களை வாசிக்க, பேராசிரியர் வி.முனீஸ்வரன் நன்றியுரை வழங்கினார்.