நாகர்கோவில் பிப் 26
குமரிமாவட்ட ஆதித்தமிழர்கட்சி சார்பில் அதன் மாவட்டச் செயலாளர் சமூக ஆர்வலர் குமரேசன் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அந்தக் கோரிக்கையாவது :- நாகர்கோவில் மாநகராட்சி உட்பட்ட செட்டிகுளம் பகுதிகளில் தற்போது உள்ள சூழ்நிலையில் போக்குவரத்து நெருக்கடி தொடர்ச்சியாக காணபடுகிறது இதற்கு முன்பு போல் உள்ள ஒரு வழிபாதையை கொண்டுவந்தால் தான் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர திர்வு ஆகும் ஒருவழி பாதை இருக்கும் போது ஒரு போக்குவரத்து காவலர் தான் இருப்பார் தற்போது இருவழிபாதையை காவல்துறை கொண்டுவந்ததின் காரணத்தால் தினதோறும் வாகன நெருக்கடி எற்படுகிறது. அது மட்டும் இல்லாமல் போக்குவரத்து காவலர் ஐந்து பேர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் ஒர் வழி பாதையை தடுத்து இருவழிபாதை அமைக்கப்படுள்ளன இதனால் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகிள்ளன, பொதுமக்கள் நெருக்கடியில் சிக்கி தவிர்த்து வருகின்றனர். ஒரு வழிபாதையாக இருக்கும் போது போக்குவரத்து சீராக நடைபெற்று வந்தது.
தற்போது நிலவி வரும் போக்குவரத்து நெருக்கடியை சீர்செய்ய ஒறே வழி சாலைவிரிவாக்கம் செய்வதுதான். செட்டிகுளம் மையபகுதிகளில் கோவிலுக்கு சொந்தமான பல கட்டிடங்கள் உள்ளன அதை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டால் போக்குவரத்து நெருக்கடி என்ற பேச்சுக்கே இடமில்லை. தற்போது உள்ள சூழ்நிலையில் வாகன நெருக்கடிக்கு காரணமான இருவழிப் பாதையை முற்றிலும் தடை செய்து முன்பு இருந்தது போல ஒருவழிப்பாதையை மிண்டும் அமைத்திட நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.