நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இந்திய திருநாட்டின் புரட்சி போராளி சுபாஷ் சந்திர போஸின் 128 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வட்டார வளமைய ஆசிரியர் சுரேஷ்குமார் நேதாஜி பற்றிய வீர வரலாற்றையும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவரின் பங்களிப்பு குறித்தும் தேசிய மாணவர் படையை தொடங்கி செயல்படுத்தியதையும் எடுத்துரைத்தார். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமையில் நடந்த நிகழ்வில் ஆசிரியர் தினேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு நேதாஜி பற்றிய நினைவுகளை எடுத்துரைத்தனர். நிகழ்வில் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.



