ஊட்டி.பிப்.19. ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் -கோத்தகிரி. சார்பில் நீலகிரி மாவட்ட ஆட்சியர். அவர்களிடம் ஓர் கோரிக்கை மனு அளித்தனர். அதில் நீலகிரி மாவட்டம். கோத்தகிரி பகுதியின் முக்கிய பிரச்சினைகள் குறித்து. கீழ்கண்ட கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் நேரடியாக அளித்தனர் 1.நீலகிரி மாவட்டத்தில் வீடு கட்ட அனுமதி வழங்கப்படுவதில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். 2.கோத்தகிரி கிளப் ரோடு பகுதியில் தார் சாலையை ஒட்டிய மழைநீர் வடிகால் கால்வாய் முழுவதும் அடைக்கப்பட்டு போக்குவரத்துக்கு சிரம்ம் ஏற்படுவதோடு மழைகாலங்களில் அருகில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் சென்று விடுகிறது. இதனால் அந்தப் பகுதியில் இருப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குள் மழைநீர் வராமல் தடுப்பு ஏற்படுத்தும் போது அருகில் உள்ள மற்ற வீடுகளுக்குள் மழைநீர் செல்வதால் அவர்களுக்குள் அடிதடி ஏற்பட்டு காவல் நிலையம் செல்லும் சூழல் ஏற்பட்டது இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர் எனவே அந்த பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய் முழுவதும் அடைப்பை நீக்கி சரிசெய்து தரவேண்டும் 3. கோத்தகிரியில் உள்ள டானிங்டன் பொது மயானம் (சுடுகாடு) புதர் செடிகள் அதிகமாக சூழ்ந்துள்ளதால் வன விலங்குகள், பாம்பு போன்ற விஷசந்துகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகிறது. எனவே மயான பகுதியை புதர் செடிகளை அகற்றி தூய்மை பணி செய்து தரவேண்டும் . 4.கோத்தகிரி பகுதியில் தார் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு வர்ணம் மற்றும் ஒளிரும் பட்டை பொருத்தாத காரணத்தால் இரவு நேரத்தில் எதிரே வரும் வாகன வெளிச்சத்தால் வேகத்தடை சிறிய வாகனங்களுக்கு தெளிவாக தெரிவதில்லை இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது எனவே இதை சரிசெய்து தரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பொதுமக்கள் நலன் கருதி கோரிக்கைகள் அடங்கிய மனுவை நுகர்வோர் சங்கத்தின் நிர்வாகிகள் ஊடாக ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.



