மதுரை ஆகஸ்ட் 21,
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகம் அமைந்துள்ள சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதான சாலைகளை சீரமைப்பது தொடர்பாக மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ் குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் அருகில் மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி , மாமன்ற உறுப்பினர் விஜயா ஆகியோர் உடன் உள்ளனர்