வேலூர் 04
வேலூர் மாவட்டம் வேலூர் தொரப்பாடி பெரிய அல்லாபுரத்தில் ராஜன் மெடிக்கல்ஸ் 9வது கிளை கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி .நந்தகுமார், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ஆகியோர் கடை திறப்பு விழாவில் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். உடன் ராஜன் மெடிக்கல்ஸ் கடை உரிமையாளர்கள் பார்த்திபன் சரவணமூர்த்தி சிவராமன் சரவணமூர்த்தி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.



