கோவை, செப். 23 –
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் உள்ள வார்டு எண் 10 முதல் 18 வரை உள்ள பொதுமக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்டம் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் விஸ்வ பிரகாஷ் தலைமை தாங்கினார். பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பரமசிவம் அனைவரையும் வரவேற்றார். முகாமை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ. ரவி, பெ.நா.பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக், பேரூராட்சி செயலாளர்கள் ஜெகதீசன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து முதல் மனுவை பெற்று முகாமை துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் உடன் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் இருந்தனர். இதில் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மகளிர் உரிமைத்தொகை பெற்று தர வேண்டி மனுக்களை அதிக அளவில் சமர்ப்பித்தனர். இந்த முகாமில் வருவாய் துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட 17 துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.



