சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அல்லிநகரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ தண்டீஸ்வரர் அய்யனார் திருக்கோயிலில் புரட்டாசி மாதம் மாதம் பிரதோஷ வழிபாடு பூஜைகள் நடைபெற்றது.
முன்னதாக மூலவர் தண்டீஸ்வரருக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது இதனை காண அல்லிநகரம் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து ஏறாளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர் வருகை புரிந்த பக்தர்களுக்கு அய்யன் அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.