By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா
ஆன்மிகம்தஞ்சாவூர்மாவட்டம்

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா

Last updated: February 11, 2025 2:25 pm
February 11, 2025
201 Views
Share
SHARE

தஞ்சாவூர், பிப்.11

தஞ்சாவூர் அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. 

      இந்த கோவிலில் உள்ள கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது என்பது தனி சிறப்பு வாய்ந்தது. இதனால் கருவறையில் உள்ள அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படு வதில்லை. அதற்கு பதிலாக ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும். 

        திருமணத்தடை நீக்குதல், குழந்தை பேறு வேண்டுதல் போன்ற பல்வேறு வரங்களை அள்ளிக் கொடுக்கும் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன் தரிசிக்க தினமும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். 

  .     இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் கடந்த 2014-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதனை தொடர்ந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு திருப்பணிகளுடன் இன்று கோலாகலமாக குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கு விழாவை காண முதல்நாள் இரவில் இருந்தே பக்தர்கள் குவிந்த வந்தவண்ணம் இருந்தனர். . அதிகாலையில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். தஞ்சாவூரை சுற்றி உள்ள கிராமங் களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடந்தே மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர்.

 

இந்த குடமுழுக்கு விழாவுக்கான யாக பூஜைகள் செய்வதற்காக 41 யாக குண்டங்களுடன் பிரம்மாண்ட மான யாகசாலை அமைக்கப் பட்டது.  இங்கு கடந்த 3-ந்தேதி விக்னேஸ்வர பூஜை , மஹா கணபதி ஹோமத்துடன் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. கடந்த 7-ந்தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்து வந்தன.  காலை விக்னேஸ்வர பூஜையுடன் 6-ம் கால யாகசாலைப் பூஜை நடைபெற்றது .                                       அதைத்தொடர்ந்து மஹா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, யாத்ராதானம் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் இருந்து மாரியம்மன் மற்றும் பரிவார கலசங்கள்  புறப்பாடு செய்யப்பட்டு மேள வாத்தியங்களுடன் ராஜகோபுரத்திற்கு சிவாச்சாரியார்கள் தலையில் புனித நீர் சுமந்து வந்தனர். 

தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு வேத மந்திரங்கள் ஓத சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சரியாக 10  மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன், விஷ்ணு துர்க்கை, பேச்சியம்மன் மற்றும் ராஜா கோபுரங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து மாரியம்மன், விஷ்ணு துர்க்கை, பேச்சியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் கலசங்களில் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. அந்த நேரத்தில் வானில் கருடன் வட்டமிட்டது. பின்னர் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய புன்னைநல்லூர் மாரியம்மா. ஓம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷங்கள் விண்ணையே முட்டும் அளவுக்கு அதிர்ந்தது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் ஷவர் மூலம் தெளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட பக்தர்கள் கண்களில் ஒற்றி கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. 

     குடமுழுக்கு விழாவில்  எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய் ஆனந்த், மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, 

சதய விழா குழு தலைவர் செல்வம் 

, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தனசேகர், சுஜாதா தனசேகர், முன்னாள் கவுன்சிலர் பூபதி, கவுன்சிலர்கள் மேத்தா,  தெட்சிணாமூர்த்தி, அ.ம.மு.க பகுதி செயலாளர் செந்தில் பல்லவராயர், 

 மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

குடமுழுக்கு விழாவை ஒட்டி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவுப்படி ஏராளமான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவில் இன்று இரவு 7  மணிக்கு மாரியம்மன் திரு வீதி உலா நடைபெற உள்ளது. தொடர்ந்து மண்டபூஜைகள் நடைபெறும்.

விளம்பரம்

You Might Also Like

மாநிலம் தழுவிய முற்றுகைப் போராட்டம்
வேளாண் கல்லூரி மாணவர்கள் நடத்திய பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு
பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்
திண்டுக்கல் மாவட்ட புனித மரியன்னை மேல்நிலை பள்ளியின் நூறாவது ஆண்டு விழா
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக நீர் மோர் பந்தல்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவண்ணாமலை

முன்னாள் படைவீரர் நலத்துறை

March 22, 2025
62 Views
சிறு மற்றும் குறு தொழில்களில் நவீன டிஜிட்டல்
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் கோணம் சாலையில் போக்குவரத்து மாற்றம்
பாண்டியன் நகரில் மார்க்ஸ் கபடி குழு நடத்தும் நிகழ்ச்சி!!
சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரி கலை திருவிழாவில் மாணவர்களுக்கு ராஜா எம்எல்ஏ சான்றிதழ் வழங்கி சிறப்புரை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account