தாட்கோ மற்றும் தொழிலாளர் நலத்துறை சார்பாக, 11 பயனாளிகளுக்கு ரூ.8 இலட்சத்து 83 ஆயிரத்து 600 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வாரந்தோறும் திங்கட் கிழமை அன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம், வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, சாலை வசதி மற்றும் மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 233 மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களில் தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் 6T60T துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது 6T60T மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், தாட்கோ சார்பாக, ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், குப்பநத்தம் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக, சமுதாய கூடத்தின் சாவியை ரோஜா மகளிர் குழுவினரிடமும், ரூ.3 இலட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் 1 பயனாளிக்கு ஆட்டோ வாகனத்தின் சாவியையும், தொழிலாளர் நலத்துறை சார்பாக, 10 பயனாளிகளுக்கு ரூ.4 இலட்சத்து 93 ஆயிரத்து 600 மதிப்பில் திருமணம், ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும் கல்வி உதவித்தொகைக்கான காசோலைகள் என மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ.8 இலட்சத்து 83 ஆயிரத்து 600 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) .சா.தனஞ்செயன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் .ரமேஷ் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) .தர்மராஜ், தாட்கோ பொது மேலாளர் .வேல்முருகன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் .மாதேஷ், உள்ளிட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics