ஊட்டி. ஜன. 25
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுக்கா அருகே கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அப்பகுதியை சார்ந்த
ஆல் தி சில்ட்ரன் சார்பில் கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அய்யன்கொல்லி ஆரம்ப சுகாதார நிலையத்தில் எடை குறைவு மற்றும் ஊட்டசத்து குறைபாடு உடைய கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறுதானியங்கள் அடங்கிய ஊட்டசத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவர்கள் சுகைல், ஜனார்த்தனன், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் உள்ளிட்டோர் ஊட்டசத்து பெட்டகம் வழங்கினார்கள். இதில் 8 கர்ப்பிணிகள், 7 பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறுதானியங்கள் அடங்கிய ஊட்டசத்து பெட்டகம் வழங்கினார்கள்.
அதுபோல அய்யன்கொல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று நிகழ்ச்சியில் மருத்துவர்கள் ரக் ஷந்தாராஜ், ராதிகா மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் 10 பேருக்கு ஊட்டசத்து பெட்டகங்கள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் நிகழ்வில் அப்பகுதியை சார்ந்த கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் ஊட்டசத்து குறைவான பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.