தருமபுரியில் புதிய குற்றவியல்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மத்திய அரசு நடைமுறையில் இருக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு உடனடியாக இந்த மூன்று குற்றவியல் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் சங்கம் மூலமாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இந்த சட்டங்களை திரும்பப்பெறும் வரை தங்களது போராட்டம்தொடரும் என்றும் தெரிவித்தனர்.இந்த போராட்டத்திற்கு வழக்கறிஞர்களின் சங்கத் தலைவர் ஆர். சிவன் தலைமையில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமன் செயலாளர், கே. குமாரன் இணைச் செயலாளர்,எம். சதாசிவம் பொருளாளர்,எம். வீரமணி, எம். மணிமுடி, ஜீ. விமலா மற்றும் வழக்கறிஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில்கலந்து கொண்டனர்.



