வேலூர்=30
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த மேல்வல்லம் பகுதியில் வீட்டின் மொட்டை மாடியில் முன் பக்கம் ஸ்டீல் கிர்ள்களால் ஆன கைப்பிடி அமைப்பதற்காக வேலூர் காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்த முகேஷ் குமார்(26) சதீஷ் குமார்(24) ஆகிய இரு இளைஞர்கள் பணியின் போது, ஸ்டீல் கம்பியை தூக்கி சுவற்றின் மீது அமைக்குபோது எதிரில் உள்ள மின் ஒயரில் எதிர்பாராத விதமாக உரசியதில் முகேஷ், சதீஸ் ஆகிய இரு இளைஞர்கள் மீது மின்சாரம் தாக்கியதால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது போன்ற மின்சார தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரண நிதி ஒரு வார காலத்துக்குள் வழங்க வேண்டும் அப்படி வழங்கவில்லை என்றால் தமிழக அரசை எதிர்த்து தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் என தெரிவித்தனர்.