திண்டுக்கல் ஜூலை: 4
தமிழ்நாடு முழுவதும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மது வணிகம் எனும் மரண வியாபாரத்தை நிறுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஒரு பகுதியாக திண்டுக்கல்லில் மனித நேய மக்கள் கட்சி சார்பாக திண்டுக்கல் பேகம்பூர் காயிதே மில்லத் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர்
கே.ஷேக்பரித் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர்
கே.முகமது பக்ருதீன் அனைவரையும் வரவேற்றார். கிழக்கு மாவட்ட பொருளாளர் எம்.அப்துல் அஹது, கிழக்கு மாவட்ட செயலாளர் தமுமுக
ஏ.முகமதுரியாஜ், (தமுமுக) தலைமை செயற்குழு உறுப்பினர்
ஏ.ஹெச்.எஸ். நஜிபுர் ரஹ்மான், மேற்கு மாவட்ட செயலாளர் கே.ஷேக் அப்துல்லாஹ், மேற்கு மாவட்ட பொருளாளர் டி.முஜிப் ரஹ்மான், மேற்கு மாவட்ட செயலாளர் (தமுமுக) எம். முகமது ரியாஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் மமக யு. முகமது முஸ்தாக் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய கிளைக் கழக துணை மற்றும் அணி நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில அமைப்புச் செயலாளர் பழனி. எம்.ஐ. பாரூக், வி.சி.க. மாவட்ட செயலாளர் கா. மைதீன்பாவா, ஐ.யூ.எம்.எல். மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எம் அம்ஜா,
சிபிஐ (எம்) நகரச் செயலாளர்
ஏ.அரபுமுகமது ஆகியோர் கலந்து கொண்டு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பல உயிர்கள் பலியானது பெறும் பாதிப்பை உண்டாக்கி உள்ளது. மேலும் இச்சம்பவம் தமிழ்நாட்டில் உலுக்கி உள்ளது. மீண்டும் மது ஒரு பொருளாக எழுந்துள்ளது. இந்நேரத்தில் அரசு மனசாட்சியோடு மது குறித்து வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்கள். மேலும் மது வணிகம் எனும் மரண வியாபாரத்தை நிறுத்த கோரி கண்டன உரையாற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கிழக்கு மாவட்ட செயலாளர் பி.முகமது ரிஜால் நன்றி கூறினார்.