டிச. 22
மனிதநேய மக்கள் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்டத்தின் சார்பில் பல்லடத்தில், பாராளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அவர்களை கண்டித்து கன்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . மனிதநேய மக்கள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர்
ஜனநாயக பேரவை தலைவர் அ.சு.பவுத்தன் மற்றும் தமிழ்நாடு இளைஞர் முன்னணி தலைவர் A.கருணாகரன் விடுதலை சிறுத்தைகள் கட்சி
ஓ. ரங்கசாமி ,அம்பேத்கர் மக்கள் இயக்கம் தேவராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் மற்றும் பல்வேறு அமைப்பு தோழர்களும், மனிதநேய மக்கள் கட்சியின் தெற்கு மாவட்ட தோழர்களும் கலந்து கொண்டனர்.