தஞ்சாவூர் ஜூலை 2
புதிய சட்டவியல் சட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டதை கண்டித்து தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதி மன்ற நுழைவாயிலில் வழக்குரை ஞர்கள் பணிகளைப்புறக்க ணித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த இந்திய தண்டனைச் சட்டம் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய ஆதாரச்சட்டம் ஆகியவற் றுக்கு மாற்றாக பாரதிய நியாய சம் ஹிதா,பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளது. சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்திற்கு தஞ்சாவூர் வழக்குரைஞர் சங்கத் தலைவர் தியாக காமராஜ் தலைமை வகித்தார்.
போராட்டத்திற்கு சங்க செயலர் சுந்தர்ராஜன் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் எம் ஆர் ஆர் சிவசுப்ரமணியன் தஞ்சாவூர் வழக்குரைஞர் சங்க முன்னாள் தலைவர்கள் அன்பரசன், பாலகிரு ஷ்ணன், தம்பிதுரை, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



