திருப்புவனம்:ஜன:10
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் சென்னையில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் முன்னிலையில் பொங்கல் தொகுப்பினை வழங்கினார்.
அதனடிப்படையில்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சி பழையூர், கோட்டை, புதூர்,இந்திரா நகர், மற்றும் டி. அதிகரை உள்ளிட்ட பல பகுதிகளில் சிவகங்கை மாவட்ட திமுக துணைச் செயலாளரும் பேரூராட்சித் தலைவருமான த. சேங்கை மாறன் கலந்து கொண்டு அரசு அலுவலர்களான வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரி கூட்டுறவு செயலாட்சியர் ராஜலெட்சுமி, கள அலுவலர் யோகேஷ் பேரூர்க்கழக செயலாளர் நாகூர் கனி ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணைத்தலைவர் ரஹமதுல்லாகான், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.