அரியலூர், மே:18
அரியலூர் சிமெண்ட் சிட்டியில் கடந்த 10ம் தேதி டால்மியா சிமெண்ட் ஆலையில் பிளாஸ்டிக் குப்பை எரிப்பு அப்பகுதியில் கரும்புகை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அப்குதி மக்கள் ஆலை முன்பு போராட்டம் நடத்தினர். காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக கூறினார். அதன் பிறகு எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்திடவில்லை. அதே அரியலூர் சிமெண்ட் ஆலைகளுக்கு செல்லும் லாரிகளால் பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. அதனை தடுக்க தனிச்சாலை அமைக்க வேண்டும் காலாவதியான சுரங்களை காடுகளாக மாற்றிட வேண்டும் எனவும் அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம் அமைத்து மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் காற்றின் மாசு அளவை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் ஆலைகளின் அத்துமீறலை கண்டித்து DYFI சார்பில் அரியலூரில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் DYFI மாவட்ட செயலாளர் அருணன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் CITU மாவட்ட துணை தலைவர் சிற்றம்பலம், DYFI மாவட்ட தலைவர் ரவீந்திரன், மாவட்ட பொருளாளர் அருண்பாண்டியன், சமூக ஆர்வலர்கள் தமிழ்களம் இளவரசன், தங்க.சண்முகசுந்தரம், சங்கர் மற்றும் மாதர் சங்கம் பாக்கியம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார். சமூக ஆர்வலர் பொன்னுசாமி, DYFI ஒன்றிய செயலாளர் குணா, சரோஜினி, ஹேமநந்தினி, மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



