கோவை, டிச. 06 –
பொள்ளாச்சி ஜே பி கேட்டரிங் சர்வீஸ் சார்பின் எதிர்வரும் 2026 புத்தாண்டு வரவேற்கும் விதமாக ஸ்பெஷல் டின்னர் செலிப்ரேஷன் 2026 என்ற தலைப்பில் 31 டிசம்பர் இரவு நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி குறித்து ஜே பி கேட்டரிங் சர்வீஸ் உரிமையாளர் ஜெயபிரகாஷ் கூறியதாவது: வரும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக முதல் முதலாக நமது பொள்ளாச்சியில் புத்தாண்டு கொண்டாட்டம் 2026 என்கின்ற தலைப்பில் கோவை சாலையில் அமைந்துள்ள நல்லப்பா மகாலில் நடைபெற உள்ளது.
இந்த கொண்டாட்டத்தில் விஜய் டிவி பாடகர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி, DJ இசை விருந்து, நடனம் இதனுடன் சிறப்பான இரவு விருந்து சுமார் 40 கும் மேற்பட்ட சைவ, அசைவ உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. நிகழ்ச்சியில் 5 வயதிற்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு நுழைவுக் கட்டணம் இலவசம் போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ளன. பொள்ளாச்சி மக்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன் எனக் கூறினார்.



