நாகர்கோவில் ஏப் 22
குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயர் இல்ல வளாகத்தில் அமைந்துள்ள அருள் வாழ்வு இல்லத்தில் கவிஞர் ஹெ.ஆஸ்வால்ட் ஹோப்பர் எழுதிய என் கிணற்றில் நிலா மிதக்குது என்னும் கவிதை நூல் வெளியீடு, தக்கலை இலக்கிய பட்டறையின் 160 ஆவது கூடுகை குருதி கொடையாளருக்கு பாராட்டு விழா தக்கலை மா.பென்னி தலைமையில் நடைபெற்றது.
விழாவில் தீரஜ் மற்றும் தீக்ஷா ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்கள்.முனைவர் சுரேஷ் டேனியல் வரவேற்புரையாற்றினார். கவிஞர் ஹெ.ஆஸ்வால்ட் ஹோப்பர் ன் முதல் கவிதை நூலான என் கிணற்றில் நிலா மிதக்குது என்னும் கவிதை நூலினை குளச்சல் மு.யூசுப் வெளியிட சாகித்திய அகாதமி யுவபுரஸ்கார் விருது பெற்ற நாவலாசிரியை மலர்வதி நூலை பெற்று வாழ்த்துரை வழங்கினார்.
முனைவர் சு.ஜெயக்குமாரி நூல் ஆய்வு உரையாற்றினார்.கவிஞர் ஆகிரா புலவர் ராமசாமி கவிஞர் குமரி ஆதவன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். நூலாசிரியர் ஏற்புரையாற்றினார். தமிழறிஞர் விருது பெற்ற வட்டார வழக்கு மொழி எழுத்தாளர் குருதி கொடையாளர் சமூக ஆர்வலர் சரலூர் த.ஜெகன் பணியை பாராட்டி நூல் ஆசிரியருக்கு பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி கௌரவித்தார்.பா.கீது ஹோப்பர் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சியை கலை ஆர்வலர் ஜோணி அமிர்த ஜோஸ் தொகுத்து வழங்கினார்.
அரங்கத்தில் பழமை வாய்ந்த ஓலை சுவடியில் எழுதப்பட்ட திருக்குறள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. விழாவில் இலக்கியப்பட்டறை உறுப்பினர்களும் நூலாசிரியரின் குடும்ப உறவினர்கள், நண்பர்கள், பல தன்னார்வ அமைப்புகளை சார்ந்தவர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.