தஞ்சாவூர். மே.12
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி, கூடுதலாக தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பாராட்டு தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி கல்வித் துறை சார்பில் உயர் கல்வி வழிகாட்டி (கல்லூரி கனவு) ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் 2024 -2025 கல்வியா ண்டில் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி மற்றும் சென்ற ஆண்டை விட கூடுதலாக தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் கள் மற்றும் ஆசிரியர்களையும் மாவட்ட கலெக்டர் பாராட்டினார்.
பின்னர், அவர் பேசும்போது. கல்லூரி கனவு முன் திட்டமிடல் கூட்டமானது .துறை சார் அலுவலர் கள் மற்றும் மாவட்ட அளவிலான செயற்குழு உறுப்பினர்களுடனும், அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு வரும் கல்வி யாண்டில் பிளஸ் டூ பொதுத்தேர்வு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் உயர் கல்வி சேர்க்கை உறுதி செய்யும் வகையில் நடந்தது.
மேலும் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை உடனடியாக மறு தேர்வு எழுத வைத்து தேர்ச்சியடை ய செய்து, அவர்களும் உயர் கல்வி யில் தொடர வழிவகை செய்ய வேண்டும் என்றார்.
கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை ,கல்லூரி கல்வி இணை இயக்குனர் ரோசி, துணை கலெக்டர் (பயிற்சி) சங்கரநாராயணன், ஆதிதிராவிடர் நல துறை அலுவலர் ரவிச்சந்திரன் மாவட்ட கல்வி அலுவலர்கள் மாதவன், சுந்தர், பழனிவேல், மாவட்ட கல்வி திட்ட அலுவலர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.