தக்கலை, பிப்- 8
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செயல்முறை பொதுத்தேர்வு நடைபெறுகிறது. மொத்தம் 189 தேர்வு மையங்களில் 19 ஆயிரத்து 387 மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.
நேற்று தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் செய்முறை தேர்வு மையத்தை கலெக்டர் அழகு மீனா பார்வையிட்டார்.
மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி, மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் பற்றி கேட்டறியப்பட்டது. பள்ளிகளுக்கு வருகை தரும் மாணவர்கள் பல்வேறுபட்ட சூழ்நிலையில் இருந்து வருகை புரிவதால் மாணவர்களின் கற்றலில் பெற்றோரை விட ஆசிரியர்களே அதிக அக்கறை காட்ட வேண்டும் என ஆசிரியர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.
எந்தவொரு சூழ்நிலைகளையும் காரணம் காட்டி மாணவர்களின் கற்றல் அடைவில் எந்த பின்னடைவும் இருத்தல் கூடாது எனவும், இத்தகைய சவாலான சூழ்நிலையில் ஆசிரியர்கள் அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு அனைத்து மாணவர்களையும் 100 சதவீத தேர்ச்சி பெற செய்வது ஆசிரியர்களின் தலைமையாய கடமையாகும். என கூறினார்.
நடைபெற்ற ஆய்வில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.