ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் தேர்தல் பொது பார்வையாளர் அஜய்குமார் குப்தா முன்னிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு சாவடிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட கணினி சுழற்சி முறை பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது ஈரோடு மாநகராட்சி ஆணையர் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலர் ஸ்ரீகாந்த் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தகுமார் உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ண சாமி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.



