கருங்கல், மார்- 1
கிள்ளியூர், குளச்சல் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் திக்கணங்கோடு கால்வாய், சிற்றாறு பட்டணங் கால்வாய் உள்ளது. இங்கு விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் திறந்து விடவும், குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளில் இருந்தும் மார்ச் 20 – ம் தேதி வரை தொடர்ந்து தண்ணீர் திறந்து விட கேட்டு நேற்று 27-ம் தேதி தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை கிள்ளியூர் எம் எல் ஏ ராஜேஷ்குமார், குளச்சல் எம் எல் ஏ பிரின்ஸ் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது அமைச்சர் ,திக்கணங்கோடு கால்வாயை உடனடியாக தூர்வாரி ஒரு சில நாட்களில் கால்வாயில் தண்ணீர் வழங்கப்படும் என்றும், சிற்றாறு பட்டணங்கால்வாய் கடை வரம்பு பகுதிகள் வரை உடனடியாக தண்ணீர் வழங்கப்படும் என்றும், குமரி மாவட்டத்தில் மார்ச் 15 – ம் தேதி வரை அனைத்து அணைகளில் இருந்தும் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் திறந்து விடுவதாக உறுதி அளித்தார். அதற்கான அரசாணை உடனடியாக வெளியிடப்படும் என்றும் கூறினார்.
இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாக ராஜேஷ்குமார் எம் எல் ஏ கூறினார்.