நாகர்கோயில் ஆகஸ்ட் 11,
பொது விநியோகத் திட்ட செயல்வாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும் மக்கள் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேந்து காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களும் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கள்அலுவலகத்தில் இந்த மக்கள் குறைவிற்கும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் , பெயர் நீக்கம் முகவரி மாற்றம் இறந்த குடும்பத் தலைவர்களின் பெயர் மற்றும் புகைப்பட மாற்றம் செய்தல், பி எச் எச் அட்டையில் பெண் குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்கள் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டன மேலும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் தரம் குறித்த புகார்களும் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.