சிவகங்கை:மார்ச்:09
சிவகங்கையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது . கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார் . சிவகங்கை மாவட்டத் தலைவர் நாகேந்திரன் முன்னிலை வகித்தார் . கூட்டத்தில் பல்வேறு விவாதப் பொருள்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் அறக்கட்டளை பற்றியும் , கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக உயர்த்த வேண்டும் . குடியிருப்பு பணி விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் . தேர்வு நிலை கிராம நிர்வாக அலுவலர் என்பதை சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர் என பெயர் மாற்ற வேண்டும் . டி.எஸ்.எல்.ஆர் – முழுப்புல பட்டா மாறுதல் , பதவி உயர்வு மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களின் ஓய்வூதிய முரண்பாடுகளை களைய அரசு விரைந்து முன் வர வேண்டும் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது . இதற்கு முன்னதாக சிவகங்கை மாவட்டச் செயலாளர் மணிவண்ணன் வரவேற்றுப் பேசினார் . பொருளாளர் அன்புச் செல்வன் நன்றி கூறினார் .