பரமக்குடி,மே. 21 : மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவி தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு தமிழக அணி சார்பாக கலந்து கொள்கிறார்.
41 வது தமிழ்நாடு மாநில சப் ஜூனியர் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி போட்டிகள் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் 2000 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக் பள்ளியை சேர்ந்த அனுஶ்ரீ என்ற மாணவி, ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக மாணவிகளுக்கான 12 வயதுக்குட்பட்ட – 35 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் ஜூன் 12 முதல் 15 வரை நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு அணி சார்பாக கலந்து கொள்ள தேர்வாகி உள்ளார். இந்த சாதனைக்கு
இமாணவி மற்றும் பயிற்சியாளர் மணிகண்ட பிரபுயும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.



