நாகர்கோவில் – ஜூலை – 19,
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர், நேற்று அங்கன்வாடி மையத்தில் பணியின் போது மரணமடைந்த வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கினார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட மேல்புறம் பகுதியை சேர்ந்த விஜி. திருவட்டார் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண பிரியா ஆகியோர்க்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி கலந்து கொண்டார்கள்.