நாகர்கோவில் ஜூன் 23
கன்னியாகுமரி மாவட்டத்தில் 98 ஊராட்சிகள்,55 பேரூராட்சிகள் மூன்று நகராட்சிகள் ஒரு மாநகராட்சி என நிர்வாக ரீதியாக செயல்பட்டு வருகிறது இந்நிலையில் ஊராட்சிகளை பேரூராட்சி மற்றும் நகராட்சிகளுடன் இணைப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது, இதில் பதினோரு கிராம ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்தவும் 34 கிராம ஊராட்சிகளை பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவுவை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஓர் ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர், இந்நிலையில் நேற்று ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பயன்பெறும் பயன்பட்டு பயனாளிகள் உள்ளிட்டோர் தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தமிழக அரசை எதிராக கோஷங்களை எழுப்பி கண்டனங்களை எழுப்பினர். ஊராட்சிகளை பேரூராட்சி மற்றும் நகராட்சியுடன் இணைப்பதால் பயன்பெற்று வரும் பொதுமக்கள் நலிவடைவார்கள், ஊராட்சி விவசாயம் மற்றும் இயற்கை சூழல் பாதிக்க ஏற்படும் மேலும் வீட்டு வரி கட்டணம் உயர்வு, கட்டிடங்களுக்கு அதிக வரி உயரும் என்பதை சுட்டிக்காட்டி போராடினர். மேலும் இது தொடர்ந்தால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.