நாகர்கோவில் நவ 23
குமரி மாவட்டம் நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறையால் காலாவதியான தகுதிச் சான்று முடிவுற்ற காப்பீடு சான்று உரிய வழித்தட சான்று இல்லாமல் இயக்கப்பட்ட சிற்றுந்து பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் லலித்குமார், மேற்பார்வையில் நாகர்கோவில் போக்குவரத்து காவல் நிலைய அதிகாரிகள் சவேரியார் சந்திப்பு அருகே வாகன சோதனை செய்த போது, காலாவதியான தகுதிச் சான்று, முடிவுற்ற காப்பீடு சான்று மற்றும் உரிய வழித்தட சான்று இல்லாமலும் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து அனந்தநாடார் குடியை நோக்கி இயக்கப்பட்ட சிற்றுந்து பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் மேற்படி சிற்றுந்து, மேல் நடவடிக்கைக்காக தோவாளை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.