ராமநாதபுரம், மே 2-
ராமநாதபுரத்தில் போர்க்களம் நவீன விளையாட்டு மைதானம் திறப்பு விழா கோலாகலமாக நடந்தது.
ராமநாதபுரம் வழிவிடும் முருகன் கோவில் பின்புறம் இளங்கோவடிகள் தெருவில் நவீன மின் விளக்கு அலங்காரத்தில் உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில்
அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் எம்பி அன்வர்ராஜா, அதிமுக மகளிரணி செயலாளர் கீர்த்திகா முனியசாமி, தகவல் தொழில்நுட்ப அணி விருதுநகர் மண்டல செயலாளர் சரவணக்குமார், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் டாக்டர் இளையராஜா, சாத்தான்குளம் ஜமாத் தலைவர் தொழிலதிபர் ரம்லி, எம் ஆர் கன்ஸ்ட்ரக்சன் பங்குதாரர் ராமமூர்த்தி, அதிமுக மீனவரணி இணை செயலாளர் ஜாகீர் உசேன், அதிமுக மகளிரணி மாவட்ட செயலாளர் ஜெய்லானி சீனிக்கட்டி உள்பட பலர் கலந்து கொண்டு மைதானத்தை திறந்து வைத்து பாராட்டினர். நவீன விளையாட்டு மைதானம் நிர்வாகி வழக்கறிஞர் ஷாமுதீன் மைதானத்தை திறந்து வைத்து சிறப்பித்தவர்களுக்கும் விழாவில் பங்கேற்று வாழ்த்துக்கள் கூறியவர்களுக்கும் நன்றி கூறினார். விழாவில் குலுக்கல் முறையில் 10 நபர்கள் தேர்வு செய்து மொபைல் போன், கிரிக்கெட் பேட், வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. ராமநாதபுரத்தில் நவீன மின்னொளி விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டது தொடர்ந்து கிரிக்கெட் கால்பந்தாட்ட வீரர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.