திண்டுக்கல், பிப்,-5
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் பெரியார்: அன்றும், இன்றும், என்றும்… என்ற தலைப்பில் திறந்தவெளி கருத்தரங்கம் நடைபெற்றது.
உயிர்வனம் மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை நிறுவனத் தலைவரும் கவிஞருமான கவியோவியத்தமிழன் கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கி நிகழ்வின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.
திமுக (Ex) மாவட்ட துணைச்செயலாளர், எரியோடு பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பெ.ஜீவா, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத்தலைவர், அய்யலூர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் தோழர் எம்.கே.சம்சுதீன்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, வடமதுரை ஒன்றிய செயலாளர் தோழர். தெய்வேந்திரன், மதிமுக, வடமதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் மூக்காராமன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஒன்றியக்குழு தோழர் காளை (எ) பழனியாண்டி,
விசிக, வடமதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் திருமாமணி, விசிக, வடமதுரை ஒன்றிய பொருளாளர் முத்துக்கணேசன், நடுப்பட்டி தனித்தமிழ் மன்றம் நிர்வாகி ஓவியர் வீராச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாவட்டச் செயலாளர் ஏ.பி.மணிகண்டன், எஐசிசிடியு, மாவட்டச் செயலாளர் ரவி, சமூக செயற்பாட்டாளர்கள் இயக்க நிறுவனர் பெ.தர்மராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நில உரிமை மீட்பு இயக்க மாநில துணைச் செயலாளர் உலகநம்பி, மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுதாகர் ஜெயராமன், அய்யலூர் பேரூர் திமுக (Ex) மாவட்டப் பிரதிநிதி மெடிக்கல் கே.விஜயன் ஆகியோர் காலத்திற்கும் பெரியாரின் தேவை குறித்து உரையாற்றினர்.
கருத்தரங்க அமர்வில், பெரியாரும் பெண் விடுதலையும்: என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவரும், பெண்ணியச் செயற்பாட்டாளுமான ஹேமலதா, பெரியாரும் சமூக நீதியும்: என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர், கவிஞர் கவிவாணன், பெரியாரும் கல்வி உரிமையும்: என்ற தலைப்பில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், பேராசிரியர் ஆ.ச.சேரிவாணன் பெரியாரும் சீர்திருத்தங்களும்: என்ற தலைப்பில் திராவிட இயக்கச் சிந்தனையாளர் சுந்தரபுரி மு.ஜெயக்குமார் , பெரியாரும் அறிவுப்புரட்சியும்: என்ற தலைப்பில் பெரியாரிய கருத்தாளர் பெரியார் சரவணன் உரையாற்றினார்கள்.
மேலும், அய்யலூர் பேரூர் திமுக அவைத்தலைவர் எஸ்.பி.மாறன், இளைஞர் பெருமன்ற மாவட்ட துணைச் செயலாளர் குமரேசன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி (Ex) மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் மகேஷ்ராஜா, வடமதுரை பேரூர் திமுக ஒன்றிய பிரதிநிதி செந்தில், கவிஞர் செந்துரை ரெங்கராஜ், மாஸ்டர் ஆ.மணிவேல், கவிஞர் சொக்கமேளா, திண்டுக்கல் தமிழ்ப்பித்தன், கவிஞர் தாமோ, கவின்குமார், தோழர்களம் இயக்க தோழர்கள் உள்ளிட்ட ஏராளமான பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்ஸிய சிந்தனையாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் பங்கேற்றனர்.
முன்னதாக, கவிஞர் டான் அவர்களின் இன்னிசைக் குழுவினர் சமூக சீர்திருத்தப்பாடல்களை பாடினர்.
இறுதியில், வழக்கறிஞர் இர.சரண்குமார் நன்றி கூறினார்.