மதுரை மே 30
மதுரை செனாய் நகர் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ராகவா லாரன்ஸ் அவர்களின் முயற்சியால் சேவையை கடவுள் என்ற அறக்கட்டளை சார்பில் மாற்றம் என்ற சேவையில் இணைந்து பயணிக்கும் விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா மற்றும் முனைவர் சி.அர்சத் முபின் ஆகியோர்கள் இணைந்து முதியோர் இல்லத்தில் உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தனர்.
அதன் பின்னர் அறந்தாங்கி நிஷா சேவை குறித்து கூறுகையில் அண்ணன் ராகவா லாரன்ஸ் அவர்களின் மாற்றம் என்ற சேவையில் நானும் இணைந்து மக்களின் தேவை அறிந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றோம் அதன் அடிப்படையில் மதுரையில் தம்பி முனைவர் அர்சத் முபின் அவர்களின் சேவையை கண்டு வியந்து அவர் இன்னும் பல சேவைகள் செய்வதற்கு ஊக்கப்படுத்தும் விதமாக நான் நேரில் வந்து முதியோர் இல்லம் பயனாளிகளை நேரில் சந்தித்து உணவுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பு செய்து கலந்து கொண்டேன். இது போன்ற இன்னும் பல மாவட்டங்களில் எங்கள் சேவை தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் முனைவர் சி.அர்சத் முபின் மற்றும் முதியோர் இல்ல காப்பாளர் முருகானந்தம்
சமூக ஆர்வலர் சூரிய நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்