திண்டுக்கல்
மே :31
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கத்தின் பொதுக்குழு கூட்ட நிகழ்ச்சி திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் என்.குமரேசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் டி.கென்னடி முன்னிலை வகித்தார். பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்களான திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க உறுப்பினர் எஸ்.விஜயக்குமார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கயவர்களை திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 02.06.2024- ம் தேதிக்குள் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
சங்க உறுப்பினர் எஸ்.விஜயக்குமார் வழக்கில் விசாரணை அதிகாரியான வேடசந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி அவர்களை விசாரணை அதிகாரி பொறுப்பிலிருந்து நீக்கி வேறு ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமித்து, மேற்படி வழக்கை முறைப்படி மீண்டும் ஆரம்பத்திலிருந்து நடுநிலைதன்மையுடன் விசாரணை செய்ய வலியுறுத்தப்படுகிறது. மேற்படி கோரிக்கைகளை 02.06.2024-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்குள் காவல்த்துறை நிறைவேற்ற தவறும்பட்சத்தில் திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை வழக்கறிஞர்கள் அனைவரும் ஒன்று திரண்டு 03.06.2024-ம் தேதி திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் முற்றுகையிடுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
வழக்கறிஞர் எஸ்.விஜயக்குமாருக்கு நீதி கிடைக்கும் வரை நீதிமன்றப் பணிகளிலிருந்து விலகி இருப்பது என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.