ஊத்தங்கரை தொகுதி அதிமுக கோட்டை எனவும், 2026 இல் அதிமுக தான் ஜெயிக்கும் என்று ஸ்டாலினுக்கு சவால் விடுவத்த கே.பி.எம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் காரப்பட்டு, அனுமன்தீர்த்தம் தனியார் திருமண மண்டபத்தில் ஒன்றிய செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர்கள் வேடி, வேங்கன் சாமிநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் கழக துணைப் பொதுச் செயலாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கேபி.முனுசாமி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி சிறப்புரை ஆற்றினர்,
அப்போது ஊத்தங்கரை தொகுதி அதிமுக கோட்டை எனவும், 2026 இல் அதிமுக தான் ஜெயிக்கும் என்று ஸ்டாலினுக்கு சவால் விடுவதாக தெரிவித்தார், அப்போது யாரை நம்பி நான் சவால் விடுகிறேன், உங்களை நம்பிதான் சாமி, என கழக நிர்வாகிளை கும்பிட்டு சொன்னார்,
முன்னதாக மறைந்த முன்னாள் தலைவர்கள்
எம்ஜி.ஆர், ஜெயலலிதா உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அசோக்குமார், ஊத்தங்கரை சட்ட மன்ற உறுப்பினர் டி.எம் தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், ஊத்தங்கரை நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம், மாவட்ட மருத்துவரனி இளையராஜா, மாவட்ட கவுன்சிலர் திருஞானம், முன்னாள் நகர செயலாளர் சிவானந்தம், மத்துர் ஒன்றிய செயலாளர்
சக்கரவர்த்தி,ஒன்றிய பொருளாளர் தில்லையப்பன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மலர்க்கொடி சுந்தரவடிவேல், பூ மலர் ஜீவானந்தம், அண்ணா தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் பழனியப்பன், மீனவர் அணி கலைச்செல்வன், வடக்கு ஒன்றிய இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் தீபக், தகவல் தொழில்நுட்ப அணி கோபி, நித்தியானந்தம், பாரதிபுரம் கிளைச் செயலாளர் அருளானந்தம் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் மறைந்த இந்திய பெருந் தொழிலதிபர் ரத்தன் டாடா உள்ளிட்ட கழக நிர்வாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.