பூதப்பாண்டி போலீசின் சட்டவிரோத போக்கை கண்டித்து எஸ்.டி.பி.ஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – பூதப்பாண்டி – டிசம்பர் – 16 – பூதப்பாண்டி போலீசின் சட்டவிரோத போக்கை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் திட்டு விளை பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்பாட்டத்திற்க்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் நகர தலைவர் சேக்மைதீன் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் முகைதீன் நாகூர்மீரான், மாவட்ட துணை தலைவர் ஜாகிர் உசேன் , பேரூராட்சி கவுன்சிலர் நபீலாஆகியோர் முன்னிலை வகித்தனர், திட்டு விளைநகர செயலாளர் முகம்மது ரிஸ்வான் வரவேற்புரையாற்றினார், சட்டமன்ற தொகுதி துணை தலைவர் அன்சார் துவக்கவுரையாற்றினார், விவசாய தொழிலாளர் நல சங்க மாவட்ட செயலாளர் ரவி, மாநில பேச்சாளர் சாதிக் அலி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் ஆர்ப்பாட்டத்தில் கட்சியிலுள்ள முகமது ரிஸ்வான் னை பூதப்பாண்டி காவல் நிலையத்திலுள்ள போலீசார் ஏதோ குற்றம் செய்தவர் போல் அவர் செல்லும் இடங்களிலும் அவரது வீட்டிற்க்கும் வந்து மிரட்டி சென்றதாகவும் ஆகையால் அந்த போலீசார் மீது தக்க நடவடிக்கை எடுக்க கேட்டும் உரையாற்றினார்கள் ஆர்ப்பாட்டத்தில் நகர துணை தலைவர் சேக் அப்துல்காதர் நன்றியுரையாற்றினார்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்கள்



